districts

img

அரசுக் கல்லூரியில் ரத்ததான முகாம்

அறந்தாங்கி, டிச.20- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோ விலை அடுத்த பெருநாவ லூர் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்திய ரத்ததான முகாமிற்கு அரசு  மருத்துவமனை ரத்த வங்கி தலைமை மருத்துவர் ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலு வலர் ராமச்சந்திரதுரை, மருத்துவ அலுவலர் ஜெகன் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் என்.கே.ரா ஜேந்திரன் முகாமை துவக்கி வைத்தார். மாணவ, மாணவி கள், பேராசிரியர்கள் ரத்த தானம் செய்தனர். முகாமில் லேப் டெக்னிசன் தினகரன், சுகாதார ஆய்வாளர்கள் வீரக்குமார், காளிமுத்து உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். நிறைவாக நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் என்.ஜீவரெத்தினம் நன்றி கூறினார்.