tamilnadu

ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 5- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா ஜூலை 9-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட திருவிழா ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. திருக்கோவில் செயல் அலுவலர் அமரநாதன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சுப்பிரம ணியன், அஸ்ரப் அலி முதுநிலை வருவாய் ஆய்வாளர் கமலநாதன் ஆகியோர் பேசினர்.