கடலூர், பிப். 7- காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கடலூ ரில் நடைபெற்றது. அமைப்பாளர் ஜி.மாத வன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்டப் பொரு ளாளர் எஸ் .தட்சணாமூர்த்தி, இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்கறி ஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், விடுதலை வேங்கைகள் அமைப்பின் மாநில பொருளா ளர் திருமுகம், மாநில துணை பொதுச்செய லாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் வி.குலோப், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் ராஜேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஸ்ரீதர், நகரச் செயலாளர் ராஜ துரை, மதிமுக நகரச் செயலாளர் ராமசாமி, சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், விவ சாய சங்க ஒன்றியத் தலைவர் பஞ்சாட்சரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். ஹைட்ரோகார்பன், சாகர்மாலா திட் டத்தை முற்றிலும் திரும்பப் பெறவேண்டும். கடலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதியை அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் வரும் பிப்ரவரி 13 அன்று காலை 10 மணிக்கு கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.