tamilnadu

img

கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஏற்காடு, மார்ச் 20- ஏற்காட்டில் உள்ள கிரா மங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனைக் கூட்டம்  வெள்ளியன்று நடை பெற்றது. சேலம் மாவட்டம், ஏற் காட்டில், கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பது குறித்து ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குண சேகர் தலைமையில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாட்சியர் ரமணி, வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன், காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அதிகளவில் வினியோகிப்பது, கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத் துத்துறை அதிகாரிகள் மூலமாக கிராமங் களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது,  வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று  திரும்புபவர்களின் செயல்பாடுகள் மற்றும்  உடல்நிலை குறித்து தொடர்ந்து கண் காணிக்க வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஏற்காட்டில் கிராம  சந்திப்புகளான நாகலூர், செம்மநத்தம், ஒண்டிக்கடை ரவுண்டானா ஆகிய பகுதி களில் கொரோனா வராமல் தற்காத்துக் கொள்ள அடிக்கடி கைகளை நன்கு கழுவ  வேண்டும். வீடு மற்றும் வீட்டை சுற்றிலும் கிருமி நாசினி அடிக்கடி தெளிக்க வேண்டும்.  பிறருடன் பேசும் போது சிறிது இடைவெளி விட்டு பேச வேண்டும். இருமும்போது கவன மாக துணி வைத்து இரும வேண்டும் உள் ளிட்டவற்றை கூறி விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர்.