tamilnadu

மின்சார சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜூன் 1 நாடு தழுவிய போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 27- மின்வாரிய அனைத்து சங்க கூட்டு நட வடிக்கை குழு கூட்டம் மன்னார்புரத்தில் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப் பாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மின்சார வாரியத்தை தனி யார்மயமாக்க வழிவகுக்கும் மின்சார சட்டதிருத்த மசோதா 2020-ஐ திரும்ப பெற வேண்டும். மாநில மின்வாரியங்களை பிரிக்கக் கூடாது. மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கக்கூடாது. மாநில அரசு சமூக அக்கறையுடன் செயல்படுத்தி வரும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், குடிசை, நெசவு தொழிலுக்கு அளிக்கும் மானியங்களை பறிக்க கூடாது. மின்துறையை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1 ஆம்  தேதி இந்தியா முழுவதும் நாடு தழுவிய மின்வாரிய பொறியாளர்கள், தொழிலா ளர்கள் இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்.

திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் 3000 ஊழியர்களும் கறுப்பு பட்டை அணிந்து வேலை செய்வது, மாவட்டம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட பிரிவு அலுவ லகங்களில் காலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, அனைத்து கோட்ட அலு வலகங்களிலும் மதிய உணவு இடை வேளையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, தென்னூர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு காலை யிலும், மன்னார்புரம் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  கூட்டத்தில் பொறியாளர் கழகம், இன்ஜினியர் சங்கம், சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.