கரூர், மே 12-மூன்று சதவீதம் அகவிலைப்படி நிலுவை தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை நிர்வாகிகள் அறிவழகன், சுரேஷ்குமார், பாண்டிகண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், மாவட்டத் தலைவர் எம்.மகாவிஷ்ணன், பொருளாளர் பொன் ஜெயராம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் லட்சுமணன், கண்ணன், அன்பழகன், பாலசுப்ரமணியம், செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.