திருச்சிராப்பள்ளி, செப்,16- 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநில துணைத்தலைவர் கண்ணன், மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், திருச்சி மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் துளசி, மாவட்ட துணைச் செயலாளர் கியூபா, மாவட்ட துணைத்தலைவர் நாகாஅர்ஜூன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஜெனா, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொடுத்தனர்.