tamilnadu

img

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்.... மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆளுங்கட்சி..  

சிங்கப்பூர் சிட்டி 
கொரோனா பதற்றத்துக்கு இடையே கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று (வெள்ளியன்று) பொதுத்தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினமே நள்ளிரவு நேரத்திலிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தற்பொழுது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி மொத்தம் 93 நாடாளுமன்ற தொகுதிகளில் 83 இடங்களை (61.2% வாக்கு) ஆளுங்கட்சியாக மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்ற நிலையில், பிரதமராக லீ சியோன் லூங் மீண்டும் தேர்வாகிறார்(?). எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 இடங்களை (40% வாக்கு) தோல்வியை தழுவியது. 

சிங்கப்பூரில் 1965-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 55 வருடங்கள் மக்கள் செயல் கட்சியே ஆட்சி செய்து வருகிறது. எனினும் அந்த கட்சி கடந்த தேர்தலை காட்டிலும் 8% வாக்குகளை இழந்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 69% வாக்குகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.