tamilnadu

img

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி...  ரோஹித் சர்மா சதம்

பெங்களூரு 
3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் (மும்பை) வென்று இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்த நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கர்நாடக தலைநகர் பெங்களூருவில் விடுமுறை நாளான ஞாயிறன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அனுபவ வீரரும் முன்னாள் கேப்டனுமான ஸ்டீவன் ஸ்மித்தின் (131 ரன்கள்) அதிரடியால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே ராகுலை (19) இழந்தது. பொறுப்பை உணர்ந்த ரோஹித் சர்மா, கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்து சீரான வேகத்தில் ரன் சேர்த்து சதமடித்து அசத்தினார். மேலும் அதிவேகமாக 9000 ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் டாப் ஆர்டரில் நுழைந்து சாதனை படைத்துள்ளார்.    தற்போதைய நிலவரப்படி (இரவு 8 மணி நிலவரம்) இந்திய அணி 34 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.ரோஹித் சர்மா (116), கோலி (46) ஆகியோர் களத்தில் உள்ளனர்.