குடவாசல், மார்ச் 8- திருவாரூர் அருகே இலவங்கார்குடி யில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் மகளிர் நலச் சங்கத்தில் உழைக்கும் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் எம்.ராஜ இளங்கோவன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சாந்தகுமாரி, நுகர்வோர் அமைப்பின் ஆர்.ரமேஷ், பாடகர் பொன்னரசி ஆகியோர் முன் னிலை வகித்தார்கள். ராஜகுரு நகர் குடி யிருப்போர் நலச் சங்கத்தின் தலை வர் கே.பாலகிருஷ்ணன், பொருளாளர் எம்.சந்திரசேகரன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் எம்.விஜய பூரணபூபாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அறிவியல் இயக்க மாவட்டச் செய லாளர் யு.எஸ்.பொன்முடி பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் கருத்து ரையாற்றினார். அமைப்பின் தலைவராக ஜெ.சரோஜா, செயலாளராக ஏ.திலக வதி, பொருளாளராக சித்ரா, துணைத் தலைவராக மோ.ஜெயந்தி, இணைச் செயலாளராக தி.கவிதா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக ஜெ. சரோஜா வரவேற்றார். நிறைவாக ஏ.திலகவதி நன்றி கூறினார்.