மன்னார்குடி, ஜுலை 15- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினரும் மன்னார்குடியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான தோழர் மன்னை மு.அம்பிகாபதி காலமானார். அவ ருக்கு வயது 86. நீண்ட காலம் உடல் நலம் குன்றியிருந்த அவர் சிகிச்சை பல னின்றி செவ்வாயன்று பிற்பகல் மன்னார்குடியில் உள்ள அவ ரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவு அறிந்து இ்ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், சிபிஐ மாவ ட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், சிபிஎம் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி. பழனிவேலு, சின்னை. பாண்டியன், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சா.ஜீவ பாரதி, சிபிஐ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது உட லுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். புதனன்று நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் இடதுசாரி கட்சி களின் மாவட்ட, ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள், அனைத்து -அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.