காலமானார்
குடவாசல், ஜூலை 22- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் திருக் கண்ண மங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொரடாச்சேரி ஒன்றியத்தின் முன்னாள் ஒன்றியச் செயலா ளர் மறைந்த கோ.கணேசனின் மருமகன் ஆர்.எஸ்.மணி யன்(65), வயது மூப்பு காரணமாக அவரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். அன்னாரின் மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் ஆகி யோர் மறைந்த தோழர் ஆர்.எஸ்.மணியன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். திங்கள்கிழமை நடை பெற்ற இறுதி நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மணியன் டி.ஜெயபால், ஆர்.மருதையன், கே.கோபி ராஜ், எஸ்.சண்முகம் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஜூலை 25 விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவாரூர், ஜூலை 22- திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நீர் மேலாண்மை திட்டப் பணிகள்
திருவாரூர், ஜூலை 22- திருவாரூர் நகராட்சி சார்பில் நீர் மேலாண்மை திட்டத் தின் கீழ் புதிய பேருந்து நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்டத்தில் நிலத்தடி நீரை செறிவூட்டும் விதமாக குடி யிருப்பு வீடுகளில் உறிஞ்சி குழாய் அமைத்தல், மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் போன்ற பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதி யாக திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 300 மரக் கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கான கடன் அட்டை முகாம்
தஞ்சாவூர், ஜூலை 22- தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர் தேரடி திடலில் விவசாயிகள் கடன் அட்டை பெறும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண் உதவி இயக்கு னர் எஸ்.மாலதி தலைமை வகித்தார். வேளாண் அலு வலர் எஸ்.ராணி, உதவி அலுவலர்கள் கே.கோகிலா, பி.தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலு வலர் அன்பரசி பேசினார். ஐ.மான்சிங், எஸ்.சக்கரியாஸ், ஜா.பிரட்ரிக், ஆ.இருதயராஜ், அ.பிரான்சிஸ் கண்டாக், அ. கோஸ் துரை, பா.பவுன்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில், மத்திய அரசின் விவசாயிகள் சிறப்பு திட்டம் மூலம் ரூ.6,000 பெறாதவர்களுக்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்தப் பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
கல்லூரியில் வணிகவியல் பேரவை தொடக்க விழா
திருச்சிராப்பள்ளி, ஜூலை 22- திருச்சி ஜமால் முஹம்மது தன்னாட்சிக் கல்லூரி வணிக வியல் துறை சார்பில் திங்கட்கிழமை வணிகவியல் பேரவை தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக் கான வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். தூய வளனார் கல்லூரியின் மனிதவள மேம்பாட்டுத்துறை பேராசிரியர் ஹெர்மன் கார்டஸ் சிறப்புரையாற்றினார். கடந்த ஏப்ரல் 2019 செமஸ்டர் தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திலும், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாண வர்களுக்கு, கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் ஏ.கே. காஜா நஜிமுத்தீன் பாராட்டு சான்றிதழை வழங்கி வாழ்த்திப் பேசினார். விழாவில் கல்லூரி பொருளாளர் ஹாஜி.எம்.ஜே. ஜமால் முகமது, துணை முதல்வர் முனைவர் ஏ.முகமது இப்ராஹீம், கூடுதல் துணை முதல்வர் முனைவர் எம்.முக மது சிஹாபுதீன், துணைச் செயலாளர் முனைவர் கே. அப்துஸ்சமது, இயக்குநர் முனைவர் அப்துல்காதர் நிஹால், விடுதி இயக்குநர்கள் முனைவர் முகமது பாசில், பெண்கள் விடுதி இயக்குநர் செல்வி. ஹாஜிரா பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை, துறை பேராசிரியர் முனைவர் ஏ.கலிலுர்ரஹ்மான் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் அடங்கிய குழு வினர் செய்தனர். முன்னதாக துறைத் தலைவர் இ.முபாரக் அலி வரவேற்றார். லெப்டினன்ட் முனைவர் கே.விஜய குமார் நன்றி கூறினார்.