tamilnadu

img

விடாமுயற்சியின் முன்னுதாரணம் ஆதரவற்றோர் இல்லத்தில் உருவான ‘கலெக்டர்’

மன்னார்குடி, ஜூலை 21-  வறுமை காரணமாக 5 வயதில் குடும்பத்தை பிரிந்து ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து பல்வேறு இன்னல்களை சந்தித்து, விடாமுயற்சி யின் காரணமாக கல்வியை தொடர்ந்து  கற்றால் வாழ்க்கையில் விரும்பியதை சாதிக்கலாம் என்பதற்கு முன்னுதாரண மாக படிப்படியாக கல்வி பயின்று தற்போது 49 வயதாகும் அப்துல் நாசர் எனும் இளைஞர் கேரளாவில் கொல் லம் மாவட்ட ஆட்சியராக பொறுப் பேற்று இருக்கிறார்.  தமது 5 வயதில் தந்தையை இழந்து விட்டார். பின்னர் தாயார் வீட்டு வேலை கள் செய்து தமது குழந்தைகள் 6 பேரை வளர்க்க கடும் சிரமத்தில் இருந்த போது, அப்துல் நாசரை தலைச்சேரி யில் உள்ள அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளார். அங்கு தங்கி படித்த அப்துல் நாசர் பள்ளிக்கூடம் செல்லும் நேரம் போக மீதி நேரங்களில் ஓட்டல் கள் மற்றும் கடைகளில் டெலிவரி பாயாகவும், கிளீனராக, பத்திரிகை விநியோகம் செய்பவராக, எஸ்.டி.டீ. பூத் ஆப்பரேட்டர் என பல்வேறு பணி களைச் செய்து 10ம் வகுப்பு வரை படித்து பின்னர் திருச்சூரில் உள்ள வட்டனப்பள்ளி அனாதை இல்லத்தில் தங்கி 12ம் வகுப்பை முடித்துள்ளார்.  பின்னர் பெங்களுருவில் டிப்ளமோ, தலைச்சேரி அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம், கோழிக்கோட்டில் உள்ள பரூக் கல்லூரியில் முதுகலை படிப்பு அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்துள்ளார். படித்துக் கொண்டே கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று அதில் கிடைத்த வருமானத்தில் தம்முடைய படிப்பை தொடர்ந்துள்ளார்.  ஒரு முறை அவர் தங்கியிருந்த தலைச்சேரி அனாதை இல்லத்திற்கு அமிதாப் காந்த்(தற்போதைய நிதி ஆயோக் செயல் அதிகாரி) 1983-ல் தலைச்சேரி துணை ஆட்சியராக இருந்த போது வந்திருந்தார். அவரின் நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளில் உத்வேகம் அடைந்த அப்துல் நாச ருக்கு அவரது மனைவி தான் உந்து சக்தியாக இருந்து நாசரை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்கி அழகு பார்த்திருக்கி றார். அப்துலின் மனைவி ருக்ஷனா ஒரு ஆசிரியை. அவர் தான் அப்துலுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத பல்வேறு  வகைகளில் ஊக்கப்படுத்தி சென்னை, தில்லி, அலிகார் போன்ற இடங்களுக்கு பயிற்சி பெற அனுப்பி வைத்து, போட்டி தேர்வுகளுக்கு தயாராகி பின்பு கேரளா சர்வீஸ் தேர்வில் வென்று மாநில அரசுப் பணியில் சேர்ந்தார்.  2015-ல் மாநிலத்தில் சிறந்த துணை ஆட்சியர் விருது பெற்று, கேரள அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள் ளார். கேரள அரசின் நுழைவுத் தேர்வுத்துறை கமிஷனராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். தற்போது கொல் லம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற் றுள்ளார். இவரது இத்தகைய வளர்ச்சி இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு உந்து சக்தியாக அமையும் என்ப தில் ஐயமில்லை.