tamilnadu

கொரோனா வார்டை மாற்று இடத்தில் அமைத்திடுக! திருத்துறைப்பூண்டியில் சமாதானக் கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 2-  ஒரே கட்டிடத்தில் இயங்குகிற கொரோ னோ வார்டினை மாற்று இடத்தில் அமைத்திட வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி நகர குழு  அனைத்துக் கட்சிகளின் சார்பில் வியாழ னன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி தலைமையில் சமாதானக் கூட்டம் நடை பெற்றது. ‘இனிமேல் எந்த ஒரு கொரோனா நோ யாளிகளையும் திருத்துறைப்பூண்டி அரசு மரு த்துவனைக்கு கொண்டுவர மாட்டோம், தற்போது இருக்கிற கொரோனா நோயாளி களையும் சிகிச்சை முடிந்த உடன் அனுப்பி  விடுவோம், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்போது மருத்துவ மனையை கொரோனா வார்டாக பயன்ப டுத்தாமல், திருத்துறைப்பூண்டி அரசு உறுப்பு  கல்லூரியில் கொரோனா வார்டாக மாற்றுவ தற்கு பரிந்துரை செய்ததாகவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் மாவட்ட துணை கண்கா ணிப்பாளர் பழனிச்சாமி, வட்டாட்சியர் ஜெக தீசன், தலைமை மருத்துவர் சிவக்குமார், நக ராட்சி பொறுப்பு ஆணையர் சந்திரசேகரன், சிபிஎம் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், மா வட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.