திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொற்கொடி கந்தசாமி, நீடாமங்கலம் ஒன்றிய (ஒளிமதி - அனுமந்தபுரம் ஊராட்சி) 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிடுகிறார். இவர் நன்மங்கலத்தில் வாக்குச் சேகரித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் சோமராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சி.டி.ஜோசப், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
*************
பாபநாசம் ஒன்றிய ஊராட்சி வார்டு எண் 10 உறுப்பினர் பொறுப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உமையாள்புரம் கிளைச் செயலாளர் ஜி.செல்வகுமார் உமையாள்புரத்தில் வாக்கு சேகரித்தார். பாபநாசம் ஒன்றியச் செயலாளர் பி.எம்.காதர் உசேன், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சீனிவாசன், வி.முரளிதரன், மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.