tamilnadu

பாவட்டகுடி நெல் கொள்முதல் நிலையம் மாவட்ட கவுன்சிலர் முயற்சியால் திறப்பு

குடவாசல், பிப்.22- நன்னிலம் ஒன்றியம் பாவட்டகுடி தமிழக  அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலை யத்தில் 3 நாட்களாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமல் மூடியே கிடக்கிறது என நன்னிலம் ஒன்றியம் 4-வது  வார்டு சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஐ.முகமது உதுமானிடம் விவசாயிகள் முறையிட்டனர்.  விவசாயிகளின் கோரிக்கை அடுத்து மாவ ட்ட துணை ஆட்சியர் மற்றும் நுகர் பொருள்  மண்டல மேலாளர் ஆகியோருடன் பாவட்ட குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து கைபேசி வாயிலாக, ‘விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கின்றனர். உடனடியாக பாவட்டகுடி அரசு நேரடி கொள்முதல் நிலை யத்தை திறக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். பின்னர் உடனடியாக பாவட்டகுடி நேரடி கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை அதி காரிகளின் துரித நடவடிக்கையால் திறக்க ப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தங்கள் கோரி க்கையை உடனே அதிகாரிகளிடமும் கொண்டு சென்று விவசாயிகளின் கோரிக்கை யை நிறைவேற்றிய மாவட்ட கவுன்சிலர் ஜ.முகமது உதுமானுக்கு விவசாயிகள் நன்றி  தெரிவித்தனர்.