குடவாசல், அக்.16- மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கள் சார்பாக குடவாசல், கொரடாச் சேரி, வலங்கைமான் ஆகிய ஒன்றி யங்களில் பிரச்சாரம் மற்றும் தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. குடவாசலில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு குடவாசல் தெற்குப் பகுதி ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை தாங்கினார். குடவாசல் விபி சிந்தன் பேருந்து நிலையம் அருகே பிரச்சார பயணம் நிறைவு பெற்றது. மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். கொரடாச்சேரி ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத் திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். சிபிஐ ஒன்றிய செயலாளர் சேசுராஜன் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி மற்றும் ஒன்றிய குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமான் ஒன்றியத்தில் கொட்டையூரில் துவங்கிய பிரச்சார பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.இராதா துவக்கி வைத்து பேசி னார். வலங்கைமான் கடை வீதியில் சிபிஐ ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், தெருமுனை பிரச்சார கூட்டத்தில் நிறைவுரையாற்றினார். பிரச்சார பயணக் குழுவிற்கு சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் தட்சிணா மூர்த்தி தலைமை தாங்கினார்.
பொன்னமராவதி
பல்வேறு கோரிக்கைகளை விளக்கி வரும் புதன்கிழமை புதுக் கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் மாபெ ரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கி றது. அதை விளக்கி பொன்னமராவ தியில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன், சி.பி.ஐ ஒன்றிய செய லாளர் ப.செல்வம் ஆகியோர் தலை மையில் பிரச்சார கூட்டம் நடை பெற்றது. சிபிஐ மாநில குழு உறுப்பி னர்கள் ஏ.எல்.ராசு, கே.ஆர்.தர்மரா ஜன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவானந்தம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் காந்தி பூங்கா மற்றும் பாலக்கரை பகுதியில் பிரச்சா ரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சிபிஎம் குடந்தை நகர செயலாளர் செந்தில்குமார் சிபிஐ நகர செய லாளர் மதியழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். பிரச்சாரத்தை விளக்கி சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜி.நீலமேகம், சிபிஐ மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி மற்றும் சிபிஎம் செயற்குழு உறுப்பி னர் சின்னை.பாண்டியன் உள்ளிட்ட சிபிஎம், சிபிஐ இடதுசாரி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.