கும்பகோணம், ஆக.3- தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் அகில இந்திய மாண வர் சங்கத்தின் வாகன பிரச்சாரப் பயணத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் தவறான கல்வி கொள்கைக்காகவும், மக் கள் விரோதப் போக்கை கண்டித் தும் இந்திய மாணவர் சங்க வாகன பிரச்சார பயணம். காஷ்மீர், கன்னி யாகுமரி, மும்பை, கொல்கத்தா என நான்கு முனைகளில் இருந்தும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி செப் டம்பர் 15 அன்று நிறைவுபெற வுள்ளது. இந்நிலையில், இந்திய மாண வர் சங்கத்தின் அகில இந்திய வாகன பிரச்சார பயணம் செவ்வா யன்று மாலை கும்பகோணம் அரசி னர் ஆடவர் கலை கல்லூரிக்கு வந்தது. அப்போது கல்லூரியின் வாயிலில் இந்திய மாணவர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் சந் துரு தலைமையில் பிரச்சார வாக னத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த வாகன பிரச்சா ரத்தில் பங்கேற்றுள்ள அகில இந் திய தலைவர் ஷானு, மாநிலத் தலை வர் கண்ணன், மாநில செயலாளர் மாரியப்பன், கேரள மாநில தலை வர் அனுஸ்ரீ ஆகியோருக்கு மரி யாதை செய்யப்பட்டு, கல்லூரி வாயிலில் பிரச்சார பயணத்திற் கான கொடியை அகில இந்திய தலைவர் ஷானு ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் இந்திய மாணவர் சங்கத் தின் மாநில துணை செயலாளர் அர விந்த்சாமி, மாநிலக் குழு உறுப்பி னர் பிரபாகரன், மாவட்டத் தலை வர் அர்ஜுன், மாவட்ட துணைச் செயலாளர் பிரதீப், மாவட்ட துணைத் தலைவர்கள் மணிகண் டன், பிரேம், சந்தோஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீர்த்தி வாசன், ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.