திருத்துறைப்பூண்டி, ஜூலை 29- முத்துப்பேட்டை ஒன்றி யம் நாச்சிகுளத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தட்டி கேட்ட, அதே ஊரை சேர்ந்த திருத்து றைபூண்டி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் சக்திவேலை தாக்கிய மணல் கொள்ளை யர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டி த்து வழக்கறிஞர் சங்க அலுவ லகம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர்.பி.அருள்செல்வன் தலை மை வகித்தார். இதில் மூத்த வழக்கறிஞர் சி.சுரேஷ்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.