மன்னார்குடி, ஜூன் 2- ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் மண்டல வாரியாக பிரிக்கப்பட்ட 8 மண்டலங்களில் மண்டலத்திற்கு ஏற்றவாறு அரசு அறிவித்த விதிமுறைகளை கடைப்பிடித்து பொது போக்குவரத்து இயங்க அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 4-வது மண்டலமான நாகை, திருவாரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகு திகளைக் கொண்டு 4 வது மண்டலத்தில் மன்னார்குடி-திருத்துறைபூண்டி, வேதா ரண்யம்- திருச்சி, இதே போல் மற்ற இடங்களிலும் பொது போக்குவரத்து தனிநபர் இடைவெளி கடைப்பிடித்தும், ஓட்டு னர், நடத்துனர் முகக் கவசம், கையுறைகள் அணிந்தும், பயணிகளுக்கு கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் கொடுத்து சுத்தம் செய்ய வைத்து அரசின் ஆலோசனைகளை பின்பற்றி பொது போக்குவரத்து இயக்கப் பட்டு நடைபெறுகிறது. பேருந்துகளில் அவ்வ ளவாக பயணிகள் இல்லையென்றாலும் போகப் போக நிலைமை சீரடையும் என பொது மக்களும், போக்குவரத்து நிர்வாகமும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.