மன்னார்குடி, பிப்.18- இந்திய சுதந்திர போராட்ட வரலாறு அதன் மரபுகள் இந்திய மதச்சார்பின்மையின் மாண்புகள் ஆர்எஸ்எஸ்-இன் நாசகர திட்டங்களை ஒரு போதும் அனுமதிக்காது. ஆர்எஸ் எஸ்ஸின் பிஜேபியின் மோடி அபிஷா கும்பலின் இந்த நாசகரமான சதித் திட்டங்களை ஜாதி மத மொழி இனம் மறந்து நாட்டுப்பற்றுடன் போராடி இந்திய மக்கள் முறியடிப்பார்கள் என மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உரையாற்றினார். கூத்தாநல்லூரில் பிப்.15 லிருந்து தொடர் இருப்பு போராட்டம் இரவும் பகலுமாக தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. அதன் ’மூன்றாம் நாள் போராட்டத்தில் இரண்டாயி ரத்திற்கும் மேற்பட்டோர் மத்தியில் ஐ.வி.நாகராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதா வது: குடியுரிமை திருத்தச்சட்டம் ஆராய்ந்து பார்த்தால் இந்திய மக்களின் ஒற்றுமையை மக்களின் நல்லிணக்க நேசத்தை சீர்குலைக்கும் தன்மை கொண்டது. இந்தியாவின் மதச்சார்பின்மை அடிப்படையை, சுக்குநூறாக தகர்த்தெறியும் சதி நோக்கத்தைக் கொண்டது. ஏர் இந்தியாவை விற்ற நரேந்திர மோடி, இந்திய ரயில்வேயை விற்றுக் கொண்டிருக்கிற நரேந்திர மோடி, இந்திய பொருளாதாரத்தில் இந்திய திட்டங்களில் பிரமாண்டமான பங்களிப்பை செய்து கொண்டிருக்கிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை விற்றுக் கொண்டி ருக்கிற நரேந்திர மோடி குடியுரிமை சட்டம் வடிவிலே இந்திய மதச்சார்பின்மை கோட்பாட்டை சிதைத்து மக்களை ஏமாற்றி விடலாம். எதிர்க்கும் இந்திய மக்களை ஒடுக்கி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கி றார். ஒரு சட்டம் மத்திய அரசின் சட்டமாக இருந்தாலும் அதை அமல்படுத்துவது மாநிலங்கள் தானே மாநில முதலமைச்சர்கள் தானே இந்தச் சட்டத்தை உருவாக்கு வதற்கு முன்னாள் முதலமைச்சர்கள் கருத்தினை மோடி அரசு கேட்கவில்லை. கலந்து ஆலோசிக்கவும் இல்லை. இச்சட்டத்தை கொண்டு வந்த முறையிலேயே பாசிச ஆணவமும் யதேச்சாதிகாரமும் உருவானது. இதை அமல்படுத்துவதாக இருந்தால் பிஜேபி ஆளும் மாநிலங்களில் மட்டும் தான் அமல்படுத்த முடியும்? இந்த போக்கு இந்தியாவில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியுமா இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம். இச்சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கேரள அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் உடனே அறிவித்தார். இந்தியாவில் முதன் முதலாக இப்படி அறிவித்தவர் பினராயி விஜயன் தான். முதன் முறையாக கேரள சட்டமன்றத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு தான் எல்லா கட்சிகளையும் ஒன்றிணைத்து தீர்மா னத்தை நிறைவேற்றி மற்ற மாநிலங்களுக்கு முன்னு தாரணமாய் பிரகடனப்படுத்திக் கொண்டது. கேரள சட்டமன்றத்தில் ஒரே ஒரு பிஜேபி உறுப்பினர் மட்டும் இதனை எதிர்த்தார் அதற்குப் பின்னாலே தான் பஞ்சாப், மேற்குவங்கம் என தொடர்ந்து புதுச்சேரி என நீண்டது. இச்சட்டத்தை இதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று அசாமின் பாஜக முதலமைச்சர் உள்பட பதின்மூன்று முதலமைச்சர்கள் பகிரங்கமாக அறிவித்து விட்டனர். நமது பாரம்பரியமிக்க நாடாளுமன்ற கட்டிடம் இந்திய ஜனநாயகத்தின் வரலாற்று கோபுரமாகும். அந்த நாடாளு மன்ற கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று தனது அமைச்சரவையை கூட்டி நரேந்திர மோடி முடிவு செய்கி றார். என்ன காரணம் தெரியுமா சுதந்திரத்தின் பிதாமகர் மகாத்மா காந்தியின் உருவச்சிலை அவர்களது கண்ணை உறுத்துகிறது. ஆர்எஸ்எஸ் என்னவெல்லாம் சொல்கிறதோ அவைகளை செய்து முடிப்பது என அமித்ஷா- மோடி கும்பல் முடிவு செய்து விட்டது. அதன் ஒரு கட்டம் தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற மக்களின் பிரமாண்டமான போராட்டங்கள் மோடியின் அமித்ஷா வின் ஆர்எஸ்எஸின் இந்து ராஷ்டிரா கனவுகளை தகர்த்து எறிந்து விடும் என்பதில் எள்ளளவும் நமக்கு சந்தேகம் இல்லை. சுதந்திர போராட்டங்களின் மரபு மதச்சார்பின்மையின் மாண்புகள் அவர்களது நாசகர திட்டங்களை ஒரு போதும் அனுமதிக்காது. இவ்வாறு ஐவி நாகராஜன் பேசினார். போராட்டத்தில் மதிமுகவைச் சேர்ந்த விடுதலை வேந்தன், மனிதநேய மக்கள் கட்சியின் காதர்பாட்சா, எஸ்டிபிஐ மாநில செயலாளர் எம். நிஜாம் மைதீன், தமுமுக செயலாளர் அப்துல் ரகீம், புகைப்பட கலைஞர் சங்க பொரு ளாளர் தீபா உள்ளிட்டோர் பேசினார்கள். நான்காம் நாளான 18-ஆம் தேதி போராட்டத்தில் புதுகை பூபாளம் கலைக்குழுவினர் நிகழ்ச்சி நடைபெற்றது.