மன்னார்குடி, ஜன.9- நீடாமங்கலம் முதல் மன்னார்குடி வரை உள்ள ரயில் பாதையை மின் மய மாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மன் னார்குடியில் நடைபெற்ற நுகர்வோர் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலா ளர் சம்பத் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மன்னார்குடியிலிருந்து மயி லாடுதுறை வரை இயக்கப் பட்டு வந்த பயணிகள் ரயில் தற்காலிகமாக திருவாரூர் வரை ஒரு மாதம் இயக்கப் படும் பட்சத்தில் அந்த வழித் தடத்திற்கு பதிலாக, பொங் கலை முன்னிட்டு மேற்படி ரயிலை மன்னார்குடியிலிருந்து திருச்சி வரை இம்மாதம் வரை இயக்க வேண்டும். நீடாமங்கலம் முதல் மன் னார்குடி வரை ரயில் பாதை மின்மயமாக்கப்பட வேண் டும். மன்னார்குடி முதல் கோவை வரை செல்லும் செம்மொழி விரைவு ரயிலை, பகலில் மன்னார்குடியில் இருந்து கரூர் வரை இயக்க வேண்டும். மன் னார்குடியிலிருந்து பெங்க ளூருக்கு புதிய ரயிலை இயக்க வேண்டும். மன் னார்குடி ரயில் நிலையத்தில் மின் விளக்குகளை முறை யாக பராமரிக்க வேண்டும். மேலும் பழுதடைந்த நடை மேடைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயற்குழு உறுப்பினர் தான்யா வர வேற்றார். முடிவில் ராமசாமி நன்றி கூறினார்.