tamilnadu

img

கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் சிபிஎம் அறிவிப்பு

திருவாரூர், மார்ச் 9- கோயில் நிலங்களில் குடியிருப்போ ருக்கான இடத்தை சொந்தமாக்கிட வலி யுறுத்தி பெரும் திரள் தொடர் முழக்கப் போராட்டம் மார்ச் 13 அன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய தலைநகரங்களிலும் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள பிரச்சனை போலவே திருவாரூர் மாவட்டத்திலும் பல ஆயிரக்கணக்கா னவர்களுக்கு குளக்கரை, ஆற்றங்கரை, நெடுஞ்சாலைத்துறை ஓரங்களில், பொதுப்பணித்துறை, வரு வாய்த்துறை புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வருகின்றனர். இவர்களு க்கு பட்டா வழங்கப் படாமலேயே ஆண் டுக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் போலவே கோவில், மடம், அறக்கட்டளை, வக்பு வாரியம் தேவாலயங்களுக்கு சொந்தமான இடங்களிலும் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வேண்டு மென நீண்ட காலமாக போராடி வரு கின்றோம். தமிழக அரசு குடிமனையும், பட்டாவும் வழங்குவதற்கு பட்ஜெட் கூட்டத் தொடரில் சென்ற 31-8-2019 ல் அரசாணை 318 வெளியிட்டது. அரசாணை 318 ன்படி ஆட்சேப னையற்ற அரசு புறம்போக்கு நிலங்க ளில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியி ருப்பவர்களுக்கு, சில நெறிமுறை களுக்கு உட்பட்டு வரன்முறைப்படுத்தி தகுதியான பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா இலவசமாக வழங்குவது, நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள் போன்ற ஆட்சேபகரமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்குவது என இந்த அரசாணை கூறுகிறது. இதே போல் கோயில் நிலங்களில் குடியிருப்பதற்கு அவர்களின் நலன் கருதி விதிமுறைக்குட்பட்டு தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த அந்த நிலங்க ளை உரிய வகையில் நில மதிப்பு  நிர்ணயம் செய்வதற்கு அரசாணை (நிலை) எண் 200 வழிகாட்டுதலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான முன்மொழிவுடன் மாவட்ட வாரியாக, நில உரிமை பெற்றுள்ள கோயில் வாரி யாக தொகுக்கப்பட்டு இந்து சமய அற நிலையத்துறை வாயிலாக அரசுக்கு அனுப்பி அரசின் ஆணை பெற்று அதன் அடிப்படையில் வரன்முறைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெற்ற 30-8-2019 இல் தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. இது ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். இந்த அரசாணையை எதிர்த்து சேலம் மாவட்டத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் என்ற இந்துத்துவ ஆதரவாளர் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்து அதன் மூலம் இந்த அரசாணைக்கு சென்ற 22-11-2019 அன்று உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏழை- எளிய மக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ள அரசாணை 318 ஐ நீதிமன்றத்தில் முறையாக வாதாடி நீதிமன்ற உத்தரவை பெற்று நடை முறைப்படுத்த தமிழக அரசு உறுதி யுடன் செயல்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. எனவே மக்கள் நலன் கருதி சாதாரண மக்களின் நீண்ட நெடுநாளைய ஆசை நிறைவேறியிருக்கிறது என மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு தடை உத்தரவு என்ற பேர டியை வழங்கியிருப்பதை தயவுகூர்ந்து மறுபரிசீலனை செய்து தமிழக அரசின் 318 அரசாணையை அமல்படுத்திட உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதி வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் மார்ச் 13 தேதி திருவாரூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய தலைநகரங்களிலும் பெரும் திரள் தொடர் முழக்க போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரு வாரூர் மாவட்ட குழு சார்பாக கட்சியின்  மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.