மாற்றுத் திறனாளிகளுக்கு விரோதமாக செயல்படும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழனன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, எஸ்.நம்புராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் நாடு திரும்பியவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. செய்தி 5