tamilnadu

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான  கூட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தல்

குடவாசல், ஆக.29- குடவாசல் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி மன்ற தலை வர்களுக்கான சிறப்பு கூட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர்  கிளாரா செந்தில் தலைமை வகித்தார். ஜல் ஜீவன் மிஷன் திட்டம் வாயிலாக ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுக ளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் விளக்கினார். 15-வது நிதிக்குழு மானியத்தில் 50 சதவீத தொகையை குடி நீர் தொடர்பான பணிகளுக்கும், மற்ற திட்டப் பணிகளுக்கு ஒது க்கப்பட்ட 25 சதவீத நிதியை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள ஊராட்சித் தலைவர்கள் சார்பில் ஒப்பு தல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் 51 புதுக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன்  பேசுகையில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கிட போதிய கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இல்லை என்றார். இதற்கு ஒன்றிய ஆணையர் சுப்பிர மணியன் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ஒரு நபருக்கு 55  லிட்டர் என்ற விகிதத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப மேல்நிலை  நீர்த்தேக்கத் தொட்டி தேவைப்பட்டால் புதிதாக கட்டித் தர ப்படும் என்றார். சீதக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் பேசு கையில், புதிய குடிநீர் இணைப்பு வழங்கிட பொதுமக்களி டமிருந்து தொகை வசூல் செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, ஆணையர் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ்  ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய் இணைப்பிலிருந்து எட்டு  மீட்டருக்குள் புதிய குடிநீர் இணைப்பு வழங்கிட பொது மக்களிடமிருந்து தொகை ஏதும் வசூல் செய்திட தேவை யில்லை எனவும் அதற்குமேல் குடிநீர் குழாய் அமைக்க தேவை ப்பட்டால் ஒரு மீட்டருக்கு 220 ரூபாய் வீதம் பொதுமக்களி டமிருந்து வசூல் செய்து குடிநீர் இணைப்பு வழங்கிட வேண்டும்  என்றும் கூறினார்.