tamilnadu

மருந்தாளுநர் பணியிடங்களை  நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஆக.11- தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை அட்டை அணியும் இயக்கம் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அதனையொட்டி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சங்க த்தின் நிர்வாகிகள் மற்றும் மருந்தாளுநர்கள் பங்கேற்ற அடை யாள போராட்டம் நடைபெற்றது. காலியாக உள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியி டங்களை பேரிடர் கால அவசியம் கருதி உடனடியாக நிரப்பிட  வேண்டும். மேலும் புதிய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். தேவையான தரமான பாதுகாப்பு உபகர ணங்களை வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த மருந்தாளுநர் குடும்பங்களுக்கு அரசு அறி வித்த 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். கருணை  அடிப்படையில் அவர்தம் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும். 8 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணி யாற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளு நர்களை பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.