tamilnadu

img

மின்வாரிய பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் செப்.7- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தஞ்சாவூர் மின் வட்டக்கிளை சார்பில், தஞ்சை மின் வாரியப் பொறி யாளர் அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டத்தலை வர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், வட்டச்செயலாளர் பி.காணிக்கைராஜ், பொருளாளர் எம்.ஆரோக்கியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். துணைத் தலைவர்கள் ஏ.அந்தோணி சாமி, கே.மணிவண்ணன், பி.ராதா, துணைச் செயலாளர்கள் பி.ரமேஷ், வி. காமராஜ், ஆர்.ஹரிகேசவன், எஸ்.ரவி கலந்து கொண்டனர். நிறைவாக துணைச் செயலாளர் யு.சேக் அகமது உஸ்மான் உசேன் நன்றி கூறினார்.  ஆர்ப்பாட்டத்தில், “1.12.2019 முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தைக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். மின்வாரிய காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.