திருவாரூர்,ஜூன் 30- சென்னையில் இருதினங்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் தொலைக்காட்சி மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு அஞ்சலி செலு த்தும் விதமாக திருவாரூரில் நினைவேந்தல் நிகழ்ச்சி திங்கட்கி ழமை நடைபெற்றது. திருவாரூர் தெற்குவீதியில் உள்ள வருவாய்த்துறை அலுவ லர் சங்க கட்டிடத்தில் ராஜ் தொலைக்காட்சி மாவட்ட செய்தியா ளர் செந்தில் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் செய்தி ஊடகத்துறைக் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.நவமணி உட்பட மாவட்ட, வட்டார செய்தியாளர்கள் கலந்து கொண்ட னர். மறைந்த வேல்முருகன் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலு த்தினர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையாளர் சங்க தலை வர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனுவில், உயி ரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும். ஒப்பந்த செவிலியரான அவரது மனைவியை நிர ந்தர பணிக்கு நியமிக்க வேண்டும். செய்தியாளர்களின் பாது காப்பை உறுதி செய்யும் வகையில் முகக்கவசங்கள், கையுறை கள், கிருமிநாசினிகள், சத்து மாத்திரைகள் கொண்ட பாது காப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை போதுமான அள விற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.