திருவாரூர், நவ.27- திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நெற்பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகளுக்கு எதிர்பா ராமல் ஏற்படும் பயிர் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. தற்போது இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பீடு செய்து கொள்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன்பெ றும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ள லாம். இதற்கான கடைசி தேதி நவம்பர் 30. அனைத்து விவசாயிகளும் தங்களது பயிர்களை உடனடியாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.