tamilnadu

img

பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

திருத்துறைப்பூண்டி,  ஜூலை 9-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் சேகல் கோட்டகத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணை யும் நிகழ்ச்சியும்,  கொடியேற்று நிகழ்ச்சியும் புதனன்று நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் டி.எஸ்.மணியன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கொடி யினை ஏற்றி வைத்து புதிதாக இணைந்த வர்களை பாராட்டிப் பேசினார். மாநில குழு  உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் புதிதாக இணை ந்தவர்களுக்கு சால்வையணிவித்து பாரா ட்டினார். இணைந்தவர்களுக்கு இரண்டு கிராம அமைப்புகளாக பிரித்து தலா 5 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.