திருத்துறைப்பூண்டி, பிப்.24- முடங்கிப் போன நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ள மின் மயானத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழுவின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. வேதை சாலையிலுள்ள தோழர் பி.சீனிவாசராவ் நுழைவாயிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இறந்தவர்களுக்கு மார் அடிப்பது போல் பெண்கள் சுற்றி நின்று மார் அடித்தனர். கட்சி நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். ஊர்வலத்தை நகர குழு உறுப்பினரும் 13 வது வார்டு ஒன்றிய கவுன்சிலருமான கு.வேதரத்தினம் துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன் கண்டன உரையாற்றினார்கள். நகர குழு ஆர்.எம்.சுப்பிரமணியன், கே.கோபு, எஸ்.தண்டபாணி, எம்.ஜெயபிரகாஷ், ஏ.கே.செல்வம், ஜெ.பாப்பம்மாள், வாலிபர் சங்க நகர செயலாளர் வழக்கறிஞர் சி.சிவசாகர் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தால் அங்கு வந்த அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.