குடவாசல், ஜூலை 28- திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் குச்சிப்பாளையம் பகுதி மற்றும் பள்ளிவாசல் தெரு பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி திங்கட்கிழமை மாலை தொற்று பாதித்த பகுதியில் ஆய்வு செய்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் குடவாசல் பேரூராட்சி பகுதியில் செவ்வாய்க்கி ழமை காலை 6 மணி முதல் வியாழக்கிழமை இரவு வரை மூன்று நாட்கள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க உத்தர விட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் ஆய்வின் போது, திருவாரூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் துரை, வருவாய் கோட்டாட்சியர் ஜெயபீரிதா, சுகாதார நலப் பணிகள் துறை துணை இயக்குனர் விஜயகுமார், குடவாசல் வட்டாட்சி யர் பரஞ்சோதி மற்றும் சுகாதாரத்துறை, பேரூராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.