tamilnadu

img

ஆறு, ஓடைகளின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை, ஜுலை 26- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், காஞ்சி, கடலாடி, கலசப்பாக்கம் பகுதிகளில், ஆறு, ஓடை  வாய்க்கால்கள் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளன. இதனால், மழையின் போது வாய்க்கால்  உடைந்து, தாழ்வான பகுதி யில் உள்ள  வீடுகளில் தண்  ணீர் புகும் நிலை உள்ளது. ஜவ்வாது மலையடிவார பகுதிகளான, கலசப்பாக்கம் அடுத்த பட்டியந்தல், வீர ளூர், மேல்சோழங்குப்பம் பகுதிகளில், கடந்த சில நாட் களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதி யில் உள்ள நீர்வரத்து ஓடை,  ஏரி வாய்க்கால்கள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதால், அவற்றில் நீர் தேங்கி, உடைப்பு ஏற்பட்டு, தாழ்வான  பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்  பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே ஓடை ஆக்கிர மிப்புகளை அகற்ற உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே பாதித்த  வீடுகளை, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும்,  வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித் தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து, ஓடை ஆக்கிர மிப்புகளை அகற்றி, தண்  ணீரை வெளியேற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.