திருவண்ணாமலை,டிச.30- திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 27 ஆம் தேதியன்று, 9 ஒன்றியங்க ளுக்கான முதல் கட்ட தேர்தலும், திங்க ளன்று இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இரண்டு கட்டமாக பதிவான வாக்குகளை எண்ணும் பணி, ஜனவரி 2 ஆம் தேதி (வியாழன்), 18 இடங்களில் நடை பெற உள்ளது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றி யத்தின் வாக்குகள், திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியிலும், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய வாக்குகள், கீழ்பெண்ணாத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும், துரிஞ்சாபுரம் ஒன்றிய வாக்குகள், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. போளூர் பகுதி வாக்குகள், போளூர் டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியிலும், கலசபாக்கம் வாக்குகள், போளூர் அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியிலும், சேத்துப் பட்டு வாக்குகள், சேத்துப்பட்டு டோமினிக் சேவி யர் மேல்நிலைப் பள்ளியிலும், செங்கம் வாக்குகள், செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், புதுப் பாளையம் வாக்குகள், புதுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியி லும், தண்டராம்பட்டு வாக்குகள், திரு வண்ணாமலை அரசு கலைக்கல்லூரியிலும், எண்ணப்படுகிறது. இதேபோல், ஜவ்வாதுமலை வாக்குகள், ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப் பள்ளியிலும், செய்யாறு வாக்குகள், செய் யாறு அண்ணா அரசு கலைக் கல்லூரியி லும், அனக்காவூர் வாக்குகள், செய்யார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வெம் பாக்கம் வாக்குகள், செய்யார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வந்தவாசி வாக்கு கள், வந்தவாசி சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தெள்ளார் வாக்கு கள், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெரணமல்லூர் வாக்குகள், பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும், ஆரணி மற்றும் மேற்கு ஆரணி வாக்குகள், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரி மேல்நிலை பள்ளியிலும் நடைபெறு கிறது.