திருவண்ணாமலை, ஜூன் 17- திருவண்ணாமலை மாவட்டம் இனாம் காரியந்தல் கிராமத்தில், ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற மூதாட்டி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும் பத்திற்கு ரூ .10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் இனம் காரி யந்தல் கிராமத்தில் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு அத்தியா வசிய பொருட்கள் இந்த கடையின் மூலம் விநி யோகம் செய்யப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள இந்த கடைக்கு மாதம்தோறும் 500 அட்டைதாரர்க ளுக்கு மட்டுமே, எண்ணெய், பருப்பு உள் ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படு கிறது. பாக்கி அட்டைகளுக்கு பொருட்கள் இல்லாமல், திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால், ரேசன் பொருட்கள் வழங்கும் தினத்தன்று, ஏராளமான மக்கள் அங்கு செல்வதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலில் மயக்கமடைவதும், தகராறு ஏற்பட்டு பொது மக்கள் காவல் நிலையம் செல்வதும் தொடர்ந்து நடக்கும் நிகழ்வாக உள்ளது. ஆயிரம் அட்டைகளுக்கு மேல் உள்ள இந்த கடையை இரண்டாக பிரித்து, புதிய கடை ஏற்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இனாம் காரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த, பெரமண்ட ஆச்சாரி என்பவரின் மனைவி தனபாக்கியம் (70) திங்களன்று ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது ஏராளமான பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்க வந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, தனபாக்கியம் உயிரிழந்தார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவ குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தனபாக்கி யம் குடும்பத்தாருக்கு, ரூ. 10 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும். கிராமத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும், அனைத்து நாட்களிலும், பொருட்கள் வழங்க வேண்டும். 500 அட்டைக்கு மேல் உள்ள குடும்ப அட்டைகளை, தனிக்கடைகள் ஏற்ப டுத்தி பொருட்கள் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.