திருவண்ணாமலை, மார்ச் 11- கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும், பயிர் சாகுபடி செய்ப வர்களுக்கும், நியாயமான கிரைய விலை தீர்மானித்து பட்டா வழங்க வேண்டும். அதற்கான தொகையை தவணை முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாது காப்பு சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன் படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் திருவண்ணாமலை யில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஜி.பன்னீர்செல்வம் தலை மை தாங்கினார். மாநில அமைப்பாளர் சாமிநடராஜன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், டி.கே.வெங்கடேசன், வி.சுப்பிரமணி, அ.உதய குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 9 பேர் கொண்ட மாவட்டக்குழு விற்கு அமைப்பாளராக பி.ஏகாம்பரம் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து கோயில், மடம், தேவாலயம், வக்புவாரிய நிலங்களில், வீடு கட்டி, பயிர் செய்துவரும் ஏழை, எளிய மக்களுக்கு, அந்த இடத்தை சொந்த மாக்கிட, நியாயமான கிரயம் மூலமும், இயலாத வர்களுக்கு அரசு இலவச மாக பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.