8 வழிச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்ராவந்தவாடி கிராமத்தில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.அபிராமன், வி.சுப்பிரமணி, பலராமன், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.