tamilnadu

img

திருவண்ணாமலையில் விபத்தை ஏற்படுத்தி வரும் கால்நடைகள் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திருவண்ணாமலை, ஆக. 2- திருவண்ணாமலை நகர் பகுதியில் மேம்பாலங்கள் கட்டப்படாததால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கடை கள் செயல்படும் பகுதிகள் மிகவும் குறுக லாக இருக்கின்றன. இந்த நிலையில் கடைக்கு வரும் பொதுமக்கள் சாலையின் இரு புறமும் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அந்த வழியாக மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும்  சில நேரம் நடந்து செல்லவும் இடையூறு ஏற்படுகிறது.

விபத்து ஏற்படுத்தும் கால்நடைகள்
இந்நிலையில் திருவண்ணாமலையில் கறவை மாடுகள், காளை மாடுகள், கன்று கள் நூற்றுக்கணக்கில் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால் அருணாச்சலேஸ்வரர் கோவில்  பகுதி, திருவூடல் தெரு, கடைவீதிகள், பழைய  அரசு மருத்துவமனை சந்திப்பு, பஸ்நிலை யம், கிரிவலப்பாதை உட்பட பல இடங்க ளிலும் கால்நடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன. சில கால்நடைகள் சாலையின் நடுவே படுத்து கிடக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய அரசு மருத்துவமனை அருகில் கண்டெய்னர் லாரி மோதி 2 பெண்கள் பலியானார்கள். கால்நடைகள் இடையூறாக இருந்ததால் இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் வாக னத்தை ஒதுக்க முடியாமல் இந்த விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. எனவே திருவண்ணாமலையில் விபத்துக்களை ஏற்படுத்தி வரும் கால்நடை களை உரிமையாளர்கள் கட்டி வைக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வளர்க்கவும் நகராட்சி அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும், மீறி கால்நடை களை சாலைகளில் விட்டால் உரிமையாளர்க ளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.