tamilnadu

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21,999 வேட்பு மனுக்கள்

திருவண்ணாமலை,டிச.17- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான அறி விக்கையின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றி யங்களுக்குட்பட்ட 860 கிராம ஊராட்சிப் பகுதி களில் 3520 வாக்குச்சாவடி மையங்களில் டிச 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு திங்களன்று முடிவடைந்துள்ள நிலையில், திரு வண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்துக் குழு உறுப்பினர் பதவிக்கு 255  நபர்களும், ஒன்றியக்குழு உறுப்பினர் பத விக்கு 2127 நபர்களும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 4250 நபர்களும், ஊராட்சி  வார்டு உறுப்பினர் பதவிக்கு 15367 நபர்க ளும் ஆக மொத்தம் மாவட்டத்தில் 21 ஆயி ரத்து 999 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.   இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணித்திட நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்  எ. சுந்தரவல்லி, தலைமை யில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்  க. சு. கந்த சாமி  முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக  கூட்ட அரங்கில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் மு. ரா. சிபிசக்கரவர்த்தி, மாவட்ட  வருவாய் அலுவலா; திரு. பொ. இரத்தின சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர்  பா. ஜெயசுதா ஆகியோர் கலந்து  கொண்டனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்கள்  குறித்து தேர்தல் பார்வையாளரை தினமும் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் செங்கம்  சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகை அலுவலகத்தில் நேரில் சந்திக்கலாம். மேலும், 96777 78184 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.