திருவள்ளூர், மார்ச் 12- தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நிலையம் உள்ளது. இதில் மோட்டார் ஆபரேட்டர்கள் 25க்கும் மேற்பட்ட வர்கள் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழி லாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மிகவும் குறைந்த கூலியில் பணியாற்றி வருகின்றனர். அந்த கூலியும் முறையாக வழங்காமல் கடந்த ஒரு வருட மாக இழுத்தடித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த -4 மாத மாக சம்பளம் முழுமையாக வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிஐடியு நிர்வாகி சி.பாலாஜி தலைமையில் மார்ச்-11 அன்று மாலை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு மாத சம்பளம் ரூ.3லட்சம் மறுநாளே கொடுப்பதாகவும், மற்றதை அடுத்த 10நாட்களில் கொடுப்பதற்காக எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஊத்துக் கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் ஜெய வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.