திருவள்ளூர், ஜூலை 21- இந்திய தொழிற்சங்க மையம்- (சிஐடியு)திருவள்ளூர் மாவட்ட மாநாடு ஊர்வலம்- பொதுக்கூட்டத்து டன் ஞாயிறன்று (ஜூலை-21) துவங்கியது. சோழவரம் ஒரக்காடு கூட்டுச் சாலையிலிருந்து புறப்பட்ட ஊர்வ லம் காரனோடை பஜார் வீதியில் பொதுக் கூட்ட மேடையை சென்ற டைந்தது. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, மாவட்டச் செயலாளர், கே.விஜ யன், தலைவர் கே.ராஜேந்திரன், பொருளாளர் ஆர்.பூபாலன், மாவட்ட துணை நிர்வாகிகள் பி.நடேசன், எம். சந்திரசேகரன், என்.நித்தியானந்தம், ஜி.விநாயகமூர்த்தி, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் லட்சுமி ஆகியோர் பொதுக்கூட் டத்தில் உரையாற்றினர். ஏ.நடராஜன் நன்றி கூறினார். திங்களன்று (ஜூலை 22) பிரதி நிதிகள் மாநாடு நடைபெறுகிறது.