செங்குன்றம், அக்.24- செங்குன்றம் கிராண்ட் லைன் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் இளவரசு. இவரது மகள் கவிதா (21) பட்டதாரி. இவர் 10 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து கடந்த வாரம் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு காய்ச்சல் வந்துள்ளது. உடனே அவரை செங்குன்றம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. எனவே சில தினங்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதனன்று பரிதாபமாக உயிர் இழந்தார்.