சேலம், டிச. 25- சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 10 மாத ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே 7ஆவது வார்டு ஆதி திரா விடர் காலனியை சேர்ந்தவர் லோக நாதன் (40). இவரது மனைவி நிர்மலா. இந்த தம்பதிக்கு தனுஷ் வேல் (4) மற்றும் கவுதம் என்ற 10 மாத ஆண் குழந்தை இருந்தனர். இந்நிலையில், குழந்தை கவுத முக்கு கடந்த 10 நாட்களாக கடுமை யான காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக தாரமங்கலத்தில் மருத் துவமனைகளில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட் களுக்கு முன் சேலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பல னின்றி செவ்வாய் இரவு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தாரமங்கலம் பகுதி யில் உள்ள ஆதிதிராவிடர் காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் சாக்கடை கால்வாய்கள் அடைபட்டு சுகாதார சீர்கேடு ஏற் பட்டுள்ளது. இதனால் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுகள் பரவி வருகிறது. இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மூடியே கிடக் கிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி அதனை திறக்க வேண்டும். மேலும் அனைத்து பகுதி களில் உள்ள கால்வாய்களை தூர் வாரி கழிவு நீரை அகற்ற வேண்டு மென கோரிக்கை விடுத்தனர்.