திருவள்ளூர், மே 23 - திருவள்ளூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கொரோனா தொற்று பர வலை தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வாழ்வா தாரம் இழந்து தவித்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள், வாலி பர், மாணவர், மாதர், விவசாய சங்கம், உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு தரப்பிலிருந்து அரிசி, மளிகை, காய்கறி, மருந்து, கிருமி நாசினி, மாஸ்க் என சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேகரித்தன. முறைசாரா, ஆட்டோ, விசைத்தறி, கைத்தறி, துப்புரவு தொழிலாளர்கள், தலித், பழங்குடி மக்கள், மாற்றுத்திறனாளிகள், வெளி மாநில தொழிலாளர் என 25 ஆயிரம் குடும்பங்களுக்கு அவை விநி யோகம் செய்யட்டன.
பொன்னேரியில் 45 நாட்கள், மீஞ்சூரில் 35 நாட்கள், இலவம்பேட்டி யில் 15 நாட்கள் என தினசரி 100 பேருக்கு உணவும், கும்மிடிபூண்டி யில் வெளிமாநில தொழிலாளர் 1200 பேருக்கு இரண்டு நாட்கள் ஆறு வேளை உணவு என மாவட்டம் முழு வதும் 15 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மற்றும் பொன்னேரி யில் 115 இளைஞர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். இளைஞர்கள் மாண வர்கள், பெண்கள், தொழிலாளர் அமைப்புகள், விவசாய அமைப்பு கள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் மனிதநேயத்தோடு நிவாரணப் பணி யில் மகத்தான முறையில் பணி யாற்றினர். மார்ச் 24 ஊரடங்கு அறிவிக்கப் பட்டு மே 3, மே 17 ஆகிய தேதி களில் படிப்படியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகள் திறக்கவும், கட்டுமானம் சார்ந்த பணிளுக்கான சிறுகடைகள் திறப்ப தற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும் நகரப்பகுதிகளில் பொதுமுடக்கம் அமலில் இருப்ப தால், கடைக்கள் திறக்கப்படாததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் சிரமப்படுகின்றனர். 50 நாட்களுக்கும் மேலாக கடை கள் திறக்காததால் சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நோய்த் தொற்று பரவிய தெரு அல்லது வீடு அருகில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறி வித்து, இதர பகுதிகளில் தளர்வு வழங்க வேண்டும். திருவள்ளூர், பொன்னேரி, திருத் தணி ஆகிய 3 இடங்களில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் அமைத்து, பரவலான முறையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஊரடங்கை மீறியதாக பறி முதல் செய்யப்பட்ட இருசக்கர வாக னங்கள் உட்பட அனைத்து வாகனங்க ளையும் உரியவர்களிடத்தில் உடனடி யாக ஒப்படைக்க வேண்டும். புரோக்கர்கள் மூலம் பணம் கொடுத்து வாகனங்களை பெறும் நிலை யுள்ளதை தடுக்க வேண்டும்.
கடை மூடச்சொல்லி அடிப்பது, அநாகரிகமாக பேசுவது, தரதரவென இழுத்துச் சென்று வழக்குப்பதிவு செய்வது, வழக்கறிஞரை தாக்கு வது, இறைச்சிகளை பறிமுதல் செய்வது, லஞ்சம் பெற்றுக் கொண்டு வாகனங்களை விடுவது போன்ற வற்றின் மீது மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் உரிய தலையீடு செய்ய வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர் பணிபுரி கின்றனர். அந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலத்திற்கு அனுப்பிவிட திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு ரயில் இயக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. அதன்படி, திருவள்ளூர், கும்மிடி பூண்டியில் இருந்தும் சிறப்புரயில் இயக்கி ஒரு பகுதி வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.
மேலும் கூடுதலான ரயில்களை இயக்கி மீதம் உள்ள தொழிலாளர்களையும் அனுப்பி வைக்க வேண்டும். செங்கல் சூளை களில் ஆய்வுசெய்து வெளிமாநிலத் தொழிலாளர்களை மீட்டு அவர்க ளது மாநிலத்திற்கு அனுப்பிட வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் சமூக மேம்பாட்டு நிதியை, பிரதமர் கேர்ஸ் நிதியத்திற்கு அனுப்பாமல், மாவட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்ப டுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.