tamilnadu

கிளைச் சிறைகளில் சமையலர் பணிக்கு ஆட்கள் தேவை

திருவள்ளூர், ஏப். 24-திருவள்ளுர் மாவட்டம், புழல் மத்திய சிறை-1ன் கட்டுப்பாட்டில் உள்ள பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி மற்றும் பூந்தமல்லி கிளைச் சிறைகளில் காலியாக உள்ள சமையலர், துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி சமையலர் பணியிடத்திற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணியில் இரண்டாண்டுக்கு குறையாத அனுபவம் இருத்தல் வேண்டும். துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு தமிழ் மொழி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது (அதிகப்படசமாக) எஸ்.சி. எஸ்.சி.ஏ.-35, எஸ்.டி.-35, பிற்படுத்தப்பட்டோர்-32, மிகவும் பிற்படுத்தப் பட்டோர்-32, ஓ.சி.-30 இருத்தல் வேண்டும். சமையலர் பணியிடத்திற்கு ரூ. 15900-50400 என்ற ஊதிய விகித அடிப்படையிலும், துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு ரூ. 15700-50000 என்ற ஊதிய விகித அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் மே மாதம் 15 ஆம் தேதிக்குள் சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, (தண்டனை) புழல், சென்னை-66 தொலைபேசி எண். 044-26590615 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். மே 15 அன்று மாலை 5.00 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று சிறைத்துறை நிர்வாகம் கூறியுள்ளது.