திருவள்ளூர், ஜூலை 9- தொழிலாளர்கள் அனைவருக் கும் 50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்ய வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 9) சிஐடியு சார்பில் அத்திப்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமை யல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங்க ளுக்கும், கேரளா, கர்நாடகா மாநி லங்களுக்கும், புதுவை யூனியன் பிரதேசத்திற்கும் டேங்கர் லாரி மூலம் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. இந்தப் பணிகளில் 300க்கும் மேற் பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 33 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு அமர்த்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறி, அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை பணி செய்ய அனு மதிக்கப்படுகின்றனர். இதனால் 4 லாரி ஓட்டுனர்கள் உள்ளிட்ட 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆலையில் பணி புரியும் அனைத்து தொழிலா ளர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், தொழிலாளர்கள் அனை வருக்கும் மத்திய அரசு 50 லட்ச ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும், விதிகளை மீறி தொழிலாளர்களை பணி அமர்த்தி நோய்தொற்றுக்கு ஆளாக்கிய துணை பொது மேலா ளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையை முற்று கையிட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஜி.விநாயகமூர்த்தி, எஸ்.நரேஷ்குமார், இ.ஜெயவேல் உள்ளிட்டோர் பேசினர்.