திருவள்ளூர், செப்.17- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2018 - 2020 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு திருவள்ளூர் மாவட்ட த்தில் விரைவில் கூடுகிறது. எனவே மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளி லுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனை கள் மற்றும் குறைகள் குறித்து மனுக்களை தலை வர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை – 600 009 என்ற முகவரிக்கு அக்டோபர் 18 ஆம் தேதி க்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரி வித்துள்ளார். இதன் விவரம் வருமாறு:- பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்க வேண்டும். மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரே யொரு துறையைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும், மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். ஆனால் மனுவில் உள்ள பொருள் கீழ்க்கண்ட வைகளாக இருத்தல் கூடாது தனிநபர் குறை, நீதி மன்றத்தின் முன் வழக்கி லுள்ள பொருள், வேலை வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன், அரசுப் பணியில் மாற்றம் உள்ளிட்டவை குறித்து அனுப்பக் கூடாது. ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். அவ்வ மயம், மனுதாரர் முன்னிலை யில், குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். அக்-18-க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.