tamilnadu

img

அரசு குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது!

அவிநாசி,ஏப்.18- அரசு குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக்கூறி மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி செல்லாண்டியம்மன் கோயில் வீதி சுப்பிரமணியம் மகன் நவீன்குமார்(36) பாஜக பிரமுகர் . இவர், அவிநாசி சோலை நகர் அரசு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 5 லட்சம் வரை பெற்றுவிட்டு வீடு வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். 
இது குறித்து அவிநாசி சூளை அருகே வசித்து வரும் ஆனந்தி அளித்த புகாரின் பேரில், அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை  கைது செய்தனர்