tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்

திருப்பூர், ஜூன் 10- திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் ரூ.29.22 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவிகளை செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் வழங்கினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந் திட்ட வளாகத்தில், மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாக னத்தை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் செவ்வாயன்று வழங்கினார். மாற் றுத்திறனாளிகளை மணந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் திருமண உதவித்தொகையும், 9 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.250 வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 250 மதிப்பிலான ஊன்றுகோல்கள் மற்றும் 50 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.56 ஆயிரத்து 400 வீதம் ரூ.28.20 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் என மொத்தம் ரூ.29 லட்சத்து 22 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வின் போது,  மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.