சேலம், செப். 23- மாற்றுதிறனாளிகளுக்கு இல வச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளி கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது உள்ள விலைவாசி உயர்வின் காரணமாக வாழ்வா தாரத்தை பூர்த்தி செய்ய முடியாமல், வாடகை வீட்டில் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு புறம்போக்கு நிலத்தை வழங்க வேண்டும். குறிப்பாக, ரெட்டியூர் கோமாளிகாடு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண் டும் என வலியுறுத்தி திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இலவச வீட்டு மனை பட்டா குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததைய டுத்து அனைவரும் கலைந்து சென்ற னர்.